சிவசித்தன் செவ்வானப் பிரபஞ்சக்கலை ஆன்மா உணர்ந்தவை 009

சிவசித்தனை வணங்குதல்

பெயர் : M.பாண்டி
வில்வம் எண் : 17 06 009
வயது : 77
முகவரி : பேச்சியம்மன் படித்துறை, மதுரை.
அலைபேசி : +91 99658 49929
தொழில் : TVS – BODYBUILT WEILDER (Retd)

பயிற்சிக்கு முன் உடல் எடை : 58 கி
தற்பொழுதைய உடல் எடை : 57.5கி

சிவசித்தன் குருகுலத்திற்கு வந்த காரணம் :

சுகர் தொந்தரவு, காலில் வேலிக்கருவேல முள்குத்தி அதன் விஷம் காலில் இருந்தது. நெஞ்சில் ஏப்பம், விக்கல் மாறி மாறி வரும். இரவு தூக்கம் சரியாக வராது. உடல் உபாதைகள் தீர்வு வேண்டி சிவசித்தனிடம் வந்தேன்.

சிவசித்தன் நாடி பார்த்தபின் ஏற்பட்ட மாற்றங்கள் :

காலில் குத்திய முள்விஷம் தற்போது சரியாகி வருகிறது. சுகர், மாத்திரை சாப்பிடுவதை நிறுத்திவிட்டேன். மாதம் 500 ரூபாய் முதல் 700 ரூபாய் வரை மாத்திரை வாங்குவது மிச்சம் ஆகிறது.

விக்கல், ஏப்பம் பயிற்சி செய்யும் போது வருகிறது. நெஞ்சில் சளி வெளியில் வந்தவுடன் விக்கல் நின்றுவிடுகிறது. இரவில் நன்றாக தூக்கம் வருகிறது. சில நேரங்களில் பகலிலும் தூக்கம் அசத்துகிறது.

பகலில் தூங்காமல் இருக்க முயற்சி செய்கிறேன். ஒரு நாளைக்கு சிவசித்தன் திருநாமங்களை நான்கு முதல் ஐந்து முறை சொல்கிறேன். சிவசித்தன் குருகுலத்தில் சொல்லும் போது உடலில் தேகசற்ப ஆற்றல் சுழல்வதை உணர்கிறேன்.

மலச்சிக்கல் ஆசனவாய் பிரச்சனை கொஞ்சம் இருக்கிறது. அதிகாலை 3.00 – 3.30 மணிக்குள் யாரோ என்னை எழுப்புவது போல் இருப்பதை நன்கு உணர்கிறேன். எழுந்து காலை கடனை முடித்துவிட்டு பயிற்சிக்கு கிளம்பி வந்து விடுவேன்.

பயிற்சிக்கு முன் பலகோவில் சென்று வந்தேன். இப்பொழுது பயிற்சி உண்டு, வீடு உண்டு என்று இருக்கிறேன். வீட்டில் தற்பொழுது பொருளாதார செலவுகள் மிகவும் குறைந்துள்ளது. சிவசித்தன் அருளால் ஆரோக்கியமாக வாழ்ந்து வருகிறேன்.

உண்மை சிவசித்தன்

Comments are closed